வாழ்க்கையின் மதிப்பை புரிய வைக்கும் கதை ? (Value of Life)
வாழ்க்கையில் நம் ஒவ்வொருக்கும் ஒரு மதிப்பு உண்டு .அந்த மதிப்பை நாம் பல தருணங்களில் கண்டுக் கொள்கிறோம். சில தருணங்களில் அது வெளிப்படமாலேயே போய் விடுகிறது .
ஒரு தந்தையிடம் மகன் ஒரு கேள்வி கேட்கிறான் .தந்தையே என் வாழ்க்கையில் என்னுடைய மதிப்பு என்ன ? அதற்கு பதில் சொல்லாமல் அந்த தந்தை அவரிடம் இருந்த ஒரு கல்லை அந்த மகனுக்கு கொடுத்து அருகில் இருக்கும் சந்தையில் போ.அங்கு யாராவது இந்த கல்லின் விலையை கேட்டால் நீ எதுவுமா வாய் திறந்து பேசாமல் இருக்க வேண்டும் . மாறாக உன்னுடைய இரண்டு விரல்களை மட்டும் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அந்த மகனும் அருகில் இருக்கும் சந்தைக்கு போய்கிறார் .
வாழ்க்கையில் நம் ஒவ்வொருக்கும் ஒரு மதிப்பு உண்டு .அந்த மதிப்பை நாம் பல தருணங்களில் கண்டுக் கொள்கிறோம். சில தருணங்களில் அது வெளிப்படமாலேயே போய் விடுகிறது .
ஒரு தந்தையிடம் மகன் ஒரு கேள்வி கேட்கிறான் .தந்தையே என் வாழ்க்கையில் என்னுடைய மதிப்பு என்ன ? அதற்கு பதில் சொல்லாமல் அந்த தந்தை அவரிடம் இருந்த ஒரு கல்லை அந்த மகனுக்கு கொடுத்து அருகில் இருக்கும் சந்தையில் போ.அங்கு யாராவது இந்த கல்லின் விலையை கேட்டால் நீ எதுவுமா வாய் திறந்து பேசாமல் இருக்க வேண்டும் . மாறாக உன்னுடைய இரண்டு விரல்களை மட்டும் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அந்த மகனும் அருகில் இருக்கும் சந்தைக்கு போய்கிறார் .
- ஒரு பெண்மணி அந்த கல்லை பார்த்து இது என்னுடைய வீடு தோட்டத்தில் வைப்பதற்கு அழகாக இருக்கும் இதன் விலை என்ன என்று கேட்கிறார் . அந்த சிறுவன் தன்னுடைய இரண்டு விரல்களை காண்பிக்கிறான். அப்போது அந்த பெண்மணி இரண்டு டாலர்களா என்று கேட்கிறார் . உடனடியாக அந்த சிறுவன் தன் தந்தையிடம் ஓடி வந்து தந்தையே சந்தையில் ஒரு பெண்மணி இந்த கல்லை இரண்டு டாலர்களுக்கு கேட்கிறார் என்று சொல்கிறான் .
- அடுத்தகாக தந்தை இந்த கல்லை நீ ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. அந்த அருங்காட்சியத்திற்கு கொண்டு போ .அங்கேயும் யாரும் இந்த கல்லின் விலையை கேட்டால் நீ எதுவுமே வாய் திறந்து பேசாமல் உன்னுடைய இரண்டு விரல்களை மட்டும் காண்பிக்க வேண்டும்.அருங்காட்சியத்திற்கு செல்கிறான் அந்த மகன், அங்கே ஒரு மனிதன் இந்த கல் மிகவும் அழகாக இருக்கிறது .இந்த கல்லின் விலை என்ன என்று கேட்கிறார் .அதற்கும் அந்த சிறுவன் தனது இரண்டு விரல்களை காண்பிக்கிறான்.அப்போது அந்த மனிதர் 200 டாலர்களா என்று கேட்கிறார்.உடனடியாக அந்த சிறுவன் தன் தந்தையிடம் ஓடி வந்து தந்தையே அருங்காட்சியத்தில் ஒரு மனிதர் இந்த கல்லை 200 டாலர்களுக்கு கேட்கிறார் என்று சொல்கிறான் .
- அடுத்தகாக தந்தை இந்த கல்லை நீ விலை மதிப்பான விற்பனை செய்கிற நிறுவனம் இருக்கிறது . அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் போய் இந்த கல்லை காட்டு அப்போது இந்த கல்லின் விலையை கேட்டால் நீ எதுவுமே வாய் திறந்து பேசாமல் உன்னுடைய இரண்டு விரல்களை மட்டும் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பிகிறார்.அந்த விலை மதிப்பான கற்களை வாங்கும் நிறுவனத்திடம் செல்கிறான் .அங்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்த கல்லை பார்த்து மிகவும் அரிதான கல் இது எப்ப டி உன்னிடம் கிடைத்தது .இந்த கல்லின் விலை என்ன என்று கேட்கிறார் .அதற்கும் அந்த சிறுவன் தனது இரண்டு விரல்களை காண்பிக்கிறான்.அ பபோது அந்த மனிதர் 2 லட்சம் டாலர்களா என்று கேட்கிறார்.உடனே அந்த சிறுவனுக்கு வியப்பும் ஆச்சரியமும் உடனடியாக அந்த சிறுவன் தன் தந்தையிடம் ஓடி வந்து தந்தையே அந்த வியாபாரி இந்த கல்லை 2 லட்சம் டாலர்களுக்கு கேட்கிறார் என்று சொல்கிறான். தந்தையே இது எப்படி இது சத்தியம் ஆகும் என்று வியப்போடு கேட்கிறான். அதற்கு அந்த தந்தை இந்த ஒரே கல்லுக்கு அருகில் இருக்கும் சந்தையில் ஒரு விலை , இந்த கல்லின் மதிப்பை அறிந்த இடத்தில் ஒரு விலை ,ஆகவே அந்த கல் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ,அதே போல தான் நீயும் எங்கே இருக்க வேண்டும் என்பதில் தான் யாரை சூழ்ந்து இருக்க வேண்டும் என்பதில் தான் மதிப்பும் மரியதையும் வெளிப்படும் . மகனே இப்போது உனக்கு வாழ்க்கையின் மதிப்பை என்ன வென்று புரிகிறதா என்று தந்தை கேட்கிறார் .எங்க இருந்து வந்தாய் எங்க பிறந்தாய் இது எதுமே முக்கியம் இல்லை .உனக்குள்ளும் ஒரு வைரம் இருக்கிறது.அதே நீ எந்த சந்தையில் விற்கிறாய் அதாவது எந்த இடத்தில் இருந்து உன் மதிப்பை வெளிப்படுக்கிறாய் என்பதை பொறுத்துத்தான் அந்த மதிப்பை நீ வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று வாழ்க்கையின் அற்புதமான பாடத்தை மகனுக்கு கற்றுக்கொடுக்கிறார் அந்த தந்தை .
- உன் நண்பன் யாரு என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் . நாம் நம் வாழ்வில் நல்ல நண்பர்களை,உறவினர்களை,சான்றோர்களை கொண்டு இருப்பது தான் வாழ்வின் நமது மதிப்பை வெளிபடுத்தும் . நம்மை மகிழ்ச்சி படுத்துபவர்களை சூழ்ந்து இருக்க வேண்டும் . நம்மை சிரிக்க வைப்பர்கள் . நமக்கு கஷ்டம் ,கவலை வரும் போது உதவி செய்வர்கள், உண்மையாக அக்கறையோடு உள்ளவர்கள் தான் மதிக்க தக்கவர்கள் .மற்றவர்கள் கடந்து செல்வர்கள் என்றார் கால் மார்க்ஸ்
- நல்ல சூழல் சூழந்து இருக்கும் படி பார்த்து கொள்வோம் . நம்முடைய நண்பர்கள் வாழ்க்கையில் எதிர் மறையான எண்ணைகளை கொண்டு இருக்கும் போது வாழ்க்கையில் துன்பங்களோ டு வாழும் போது அவர்களும் அவர்களுடைய மதிப்பை உணர்ந்து கொள்ளும் பொருட்டு நாம் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்போம் .நல்ல நம்பிக்கை கொடுப்போம் .அவர்களும் சமுகத்தில் நல்ல நிலைமை வர உதவி செய்வோம் .
No comments:
Post a Comment